Home இலங்கை சமூகம் யாழில் அதிகரிக்கும் திருட்டுச் சம்பவங்கள் : மக்களின் உதவியை நாடும் பொலிஸார்

யாழில் அதிகரிக்கும் திருட்டுச் சம்பவங்கள் : மக்களின் உதவியை நாடும் பொலிஸார்

0

யாழ்ப்பாண (Jaffna) நகரப் பகுதியில் உள்ள மக்களிடம் பொலிஸார் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளனர்.

நகரை அண்மித்துள்ள வர்த்தக நிலையங்களில் திருட்டுக்களில் ஈடுபடும் கும்பல்கள் தொடர்பான தகவல் கிடைத்ததால் அதனை அறியத் தருமாறே பொலிஸார் பொதுமக்களை
கோரியுள்ளனர்.

குறித்த வர்த்தக நிலையங்களுக்குள் மூவர் அடங்கிய கும்பலாக சென்று, அங்கு பொருட்களை
வாங்குவது போல பல பொருட்களை திருடி மறைத்து எடுத்து
செல்வது அங்குள்ள பாதுகாப்பு கண்காணிப்பு கமராக்களில் பதிவாகியுள்ளது.

இந்த கும்பல் தொடர்ச்சியாக இவ்வாறான திருட்டுக்களில் ஈடுபட்டு வருவதனால் ,
அவர்கள் தொடர்பான தகவல்கள் அறிந்தால், அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு
அறிவிக்குமாறு பொலிஸார் மக்களை கோரியுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version