Home முக்கியச் செய்திகள் போதைப்பொருளுடன் சிக்கிய பௌத்த பிக்கு!

போதைப்பொருளுடன் சிக்கிய பௌத்த பிக்கு!

0

ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த பௌத்த தேரர் ஒருவர் மற்றும் இரண்டு நபர்கள் மெல்சிறிபுர காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குருணாகலை- கரந்தகொல்ல பிரதேசத்தில் உள்ள விஹாரை ஒன்றில் நேற்று (11.10.2025) இந்த கைது இடம்பெற்றுள்ளது.

27 வயதுடைய தேரரிடமிருந்து 2300 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

போதைப்பொருள் தொகை 

கைது செய்யப்பட்ட தேரருடன் வெலகெதர பிரதேசத்தில் வசிக்கும் 35 வயதுடைய ஒருவர் மற்றும் இப்பாகமுவ பிரதேசத்தில் வசிக்கும் 22 வயதுடைய ஒருவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இரு சந்தேகநபர்களிடமிருந்தும் 4800 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதேவேளை, கைது செய்யப்பட்ட தேரர் பயன்படுத்தியதாகக் கூறப்படும் அதி சொகுசு கார் ஒன்றும் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version