ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சி காலத்தில் தமிழ் விடுதலைப் போராட்டத்திற்காக உண்ணாவிரதப் போராட்டத்தில் தனது உயிரைத் தியாகம் செய்த தியாக தீபம் திலீபனுக்காக மேற்கொள்ளப்பட்ட நினைவு ஊர்தி பயணம் தொடர்பில் வாக்குமூலம் பெற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கட்சியின் சட்டத்தரணி நடராஜ் காண்டீபன் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
2023 இல் தியாக தீபம் திலீபனின் 36ஆவது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு வடக்கு கிழக்கில் பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்ட ஊர்தி திருகோணமலையில் கிழக்கில் சிங்கள குண்டர்கள் குழுவால் தாக்கப்பட்டது.
தாக்குதல்
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் மற்றும் கட்சியின் சட்டத்தரணி நடராஜ் காண்டீபன் ஆகியோரும் இந்தத் தாக்குதலில் காயமடைந்தனர்.
இதேவேளை, தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படத்தை தாக்கி சேதப்படுத்திய காட்சிகளும் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்டவர்கள் மீது தாக்குதல் நடாத்திய காட்சிகளும் ஊடகங்களில் காணொளியாக வெளியாகியது.
வாக்குமூலம்
இந்த நிலையில், ஜனவரி 16, 2025 அன்று, பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவு (CTID) வெள்ளவத்தை காவல் நிலையத்திற்கு, ஜனவரி 21, 2025 அன்று காலை 09.00 மணிக்கு திலீபன் நினைவு ஊர்தி தொடர்பான விசாரணை தொடர்பாக வாக்குமூலம் பெறுவது அவசியம் என்று தெரிவித்துள்ளது.
மேற்படி, காவல்துறை பிரிவில் வசிக்கும் நடராஜ் காண்டீபன், கொழும்பு 01, பழைய காவல் தலைமையகக் கட்டிடத்தில் அமைந்துள்ள பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் புலனாய்வுப் பிரிவில் முன் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளார்.