இந்திய அரசின் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட யாழ்.கலாசார நிலையத்திற்கு கடந்த 18 ஆம் திகதி திருவள்ளுவர் கலாசார மையம் என பெயர் சூட்டப்பட்டது.
குறித்த விடயம் சமூக ஊடகங்கள் உட்பட தமிழ் மக்கள் மற்றும் தமிழ் அரசியல்வாதிகளிடையே பாரிய அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.
அத்தோடு, குறித்த நடவடிக்கையானது தமிழ் மக்களின் அடையாளத்தை அழிப்பதற்காக முன்னெடுக்கப்படும் ஒரு ஆரம்ப நடவடிக்கையாகவும் இருக்கலாம் என மக்கள் விசனம் வெளியிட்டு வந்தனர்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த தமிழ் அரசியல்வாதிகள், திருவள்ளுவர் கலாசார மையம் என பெயர் மாற்றப்பட்டமை குற்றமில்லை ஆனால் யாழின் தனித்துவம் அங்கு அழிக்கப்படுவதே ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விடயமாகவுள்ளது என தமது வாதங்களை முன்னிருத்தியிருந்தனர்.
இருப்பினும், இந்திய அரசியல் தலைமைகள் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது, இந்த நடவடிக்கை இலங்கை மற்றும் இந்திய உறவுகளை மேலும் வலுப்படுத்துவதாகவும் இது தமிழர்களுடனான இந்தியாவின் ஒரு உறவு பாலத்தை அடுத்த கட்டத்திற்கு முன்னெடுத்து செல்லுவதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கை எனவும் தமது சமூக வலைதளங்கள் வாயிலாக தெரிவித்திருந்தனர்.
இவ்வாறான கருத்துக்களை அவர்கள் தெரிவித்திருந்தாலும், உதவி, தமிழர்களுக்கான நிதி மற்றும் தமிழர் பிரதேசங்களில் அபிவிருத்தி நடவடிக்கை என ஈழத்தமிழ் மக்களின் அடையாளத்தை புதைப்பது ஏற்றுகொள்ள முடியாத ஒரு விடயமாகவே உள்ளது.
உதவி என்ற பெயரில் தமிழர்களின் இயலாமையை அரசியல் தலைமைகள் பயன்படுத்துவதை இனி வரும் காலங்களில் முற்றாக தடுத்து அதற்கு அனுமதிக்காத பட்சத்திலேயே தமிழ் மக்களின் அடையாளம் எதிர்காலத்தில் பாதுகாப்பாக பேணப்படும் எனவும் மக்கள் தமது ஆதங்கத்தை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றனர்.
இந்தநிலையில், இந்த பெயர் மாற்றத்திற்கான காரணம் என்ன மற்றும் இந்த நடவடிக்கையின் பிண்ணனியில் இருக்கும் அரசியல் நகர்வு என்ன என்பது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது ஐ.பி.சி தமிழின் இன்றைய சமகாலம் நிகழ்ச்சி,
https://www.youtube.com/embed/yzP0ZghTXlA