Home இலங்கை அரசியல் தவறான அரசாங்கத்தை தெரிவு செய்த வாக்காளர்கள் : வஜிர பகிரங்கம்

தவறான அரசாங்கத்தை தெரிவு செய்த வாக்காளர்கள் : வஜிர பகிரங்கம்

0

மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு அரசாங்கத்தை பேசிப் பயனில்லை, வாக்காளர்களே பிழையான தீர்மானத்தை எடுத்து விட்டார்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன (Wajira Abeywardana) தெரிவித்துள்ளார்.

கடந்த மூன்று மாத காலங்களில் மக்கள் பிரச்சினைகளுக்கு இந்த அரசாங்கத்திடம் தீர்வு இல்லை என்பது நிரூபணம் ஆகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மக்களின் ஆணையை வலுப்படுத்துவோம் என்ற தொனிப் பொருளில் காலியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்

நாங்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் இந்த அரசாங்கத்திற்கு ஆட்சியை ஒப்படைக்க வேண்டாம் என மக்களிடம் கோரிய போதிலும் மக்கள் அதனை உதாசீனம் செய்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு அரசாங்கத்தை பேசிப் பயனில்லை எனவும் வாக்காளர்கள் பிழையான தீர்மானத்தை எடுத்து விட்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் 77 ஆண்டுகால சாபம் என்ற பிரசாரத்தின் ஊடாக ஆட்சியைப் பிடித்ததாகவும் தற்பொழுது அரசாங்கத்தை விட 77 ஆண்டு கால சாபம் மேலானது என அவர் தெரிவித்துள்ளார்.

மக்கள் பாவனைக்கு அரிசி

77ஆண்டு சாபத்தின் போது 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தேங்காய் தற்பொழுது 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

கடந்த அரசாங்க ஆட்சி காலத்தில் ரணில் விக்ரமசிங்கவும் இருந்தார் குரங்குகளும் இருந்தன, பிரதான அரிசி ஆலை உரிமையாளர்களும் இருந்தனர்.

இவ்வாறான ஒரு நிலையில் நாட்டில் தேங்காயும், மக்கள் பாவனைக்கு அரிசியும் காணப்பட்டதாக முன்னாள் அமைச்சர் வஜிர சுட்டிக்காட்டியுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version