Home இலங்கை பொருளாதாரம் லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை குறைப்பு விரைவில்…!

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை குறைப்பு விரைவில்…!

0

உலக சந்தையில் எரிவாயு விலையில் ஏற்ற இறக்கங்கள் இருப்பினும், பெப்ரவரி மாதத்தில் நுகர்வோருக்கு அதிகபட்ச விலைக்குறைப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று லாஃப்ஸ் சமையல் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

லாஃப்ஸ் குழும தலைமை நிர்வாக அதிகாரி நிரோஷன் ஜே. பீரிஸ், இது குறித்த தீர்மானங்கள் மேலிடத்துடனான கலந்துரையாடலுக்கு பின்னர் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளர். 

மலிவு விலை

மேலும் அவர், உலக சந்தை, எரிவாயுக்களின் விலைப்பட்டியலை இன்னும் வெளியிடவில்லை. அவை வெளியிடப்பட்டவுடன், ஒரு நிறுவனமாக, உயர் நிர்வாகத்துடன் சேர்ந்து, நுகர்வோருக்கு மிகவும் மலிவு விலையை நிச்சயமாக வழங்குவோம்.

அதேவேளை, ஜனவரி மாதத்தில், உலக சந்தையில் விலை ஏற்ற இறக்கம் ஒரு சீராக இருக்கும் என்று நாங்கள் கருதுகிறோம்.

இருப்பினும் கடந்த சில நாட்களாக அது அது மாறக்கூடும் வாய்ப்பை காட்டுகின்றது. எனவே, பெப்ரவரி மாதத்தில் பெட்ரோல் விலையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து தற்போது கணிப்பது கடினம்” என சுட்டிக்காட்டியுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version