Home இலங்கை அரசியல் தென்னிலங்கைக்கு தலைவலியாக மாறிய அர்ச்சுனா – அரசியலிலிருந்து விலக தீர்மானம்

தென்னிலங்கைக்கு தலைவலியாக மாறிய அர்ச்சுனா – அரசியலிலிருந்து விலக தீர்மானம்

0

தான் அரசியலில் நீண்ட காலம் நீடிக்கப்போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் (Ramanathan Archchuna) தெரிவித்துள்ளார்.

நேற்று சாவகச்சேரி பகுதியில் கைது செய்யப்பட்டு அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

இதன்போது சிங்கள ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில், அரசியல் கலாசாரத்தின் மீது தனக்கு எந்த அனுதாபமும் இல்லை என அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

மக்களுக்கான அரசியல்

தான் இதுவரை யாருக்கும் வாக்களித்ததில்லை எனவும் இது மக்களுக்கான அரசியலில் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நீண்ட காலம் அரசியலில் நீடிக்கப்போவதில்லை. இருக்கும் வரை நேர்மையாக செயற்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் அனுராதபுரத்தில் போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்ததற்காக நாடாளுமன்ற உறுப்பினர் நேற்று பிற்பகல் யாழ்ப்பாணத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

அனுராதபுரம் தலைமை நீதவான் நாலக சஞ்சீவ ஜெயசூரிய முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், தலா 200,000 ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளின் அடிப்படையில் பிணை வழங்கப்பட்டது.

பெரும் தலைவலி

கடந்த பொதுத் தேர்தலில் சுயேட்சை குழுவாக போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக அர்ச்சுனா தெரிவாகி இருந்தார்.

இந்நிலையில் இலங்கை அரசியல் மட்டத்தில் மிகவும் சர்ச்சைக்குரிய நபராக அவ்வப்போது சம்பவங்களை அர்ச்சுனா மேற்கொண்டு வருவதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

அடுத்து வரும் ஐந்து வருடங்களுக்கு நாடாளுமன்றத்தில் பெரும் தலைவலியாக அர்ச்சுனா ராமநாதன் செயற்படுவார் என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  

NO COMMENTS

Exit mobile version