இலங்கையில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலையில் வாழும் சுமார் 17,000
சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த
விஜேபால தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம்
அரசாங்கம் அனைத்து மட்டங்களிலும் சிறுவர்களை கண்காணித்து வருகிறது.
அத்துடன் எவரையும் புறக்கணிக்காமல், சிறுவர்களின் சமூகப் பாதுகாப்பையும் உறுதி
செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிட்டார்.
வடமேற்கு மாகாண சபை கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வின் போது அமைச்சர்
இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி தலைமையிலான தற்போதைய அரசாங்கம், எதிர்கால சந்ததியினர் வாழ ஏற்ற ஒரு
நாட்டை உருவாக்க உறுதிபூண்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
