Home இலங்கை சமூகம் மட்டுவில் கைவிடப்பட்டிருந்த இரு கைக்குண்டுகள் மீட்பு

மட்டுவில் கைவிடப்பட்டிருந்த இரு கைக்குண்டுகள் மீட்பு

0

வாழைச்சேனை பொலன்னறுவை பிரதான வீதியிலுள்ள வாகனேரி 125ஆவது மைல் கல் பகுதியை அண்டிய காட்டுப்பகுதியில் கைவிடப்பட்டிருந்த இரு கைக்குண்டுகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.

குறித்த சம்பவமானது நேற்றையதினம்(26) பிற்பகல் விசேட அதிரடிப்படையின் குண்டு செயலிழக்கும் பிரிவினர் மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விசாரணை

வாழைச்சேனை அரச புலனாய்வு துறைக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றுக்கு அமைய விசேட அதிரடிப்படையினருடன் அரச புலனாய்வு பிரிவினர் பொலிஸாருடன் இணைந்து சம்பவதினூடான பிற்பகல் 2.50 மணியளவில் குறித்த இடத்தில் கைவிடப்பட்ட இரு கைக்குண்டுகளை மீட்டனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட கைக்குண்டுகளை நீதிமன்ற உத்தரவை பெற்று இன்று(27) வெடிக்க வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version