அமெரிக்காவில் சீரற்ற காலநிலை காரணமாக 2,000இற்கும் அதிகமான விமான பயணங்கள் நேற்று(21.01.2025) இரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் தெற்கு பகுதிகளில் ஒரு அரிய வகை பனிப்புயல் வீசி வருவதால் அதிவேக வீதிகள் மற்றும் விமான நிலையங்களை பனி சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதிகளுக்கு பனிப்புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வரலாற்றில் முக்கியமான பனிப்பொழிவை வளைகுடா கடற்கரை சந்திக்க உள்ளதாக தேசிய வானிலை சேவை தெரிவித்துள்ளது.
அவசர நிலை
கிழக்கு டெக்சாஸிலிருந்து மேற்கு புளோரிடா பன்ஹேண்டில் வழியாக ஒரு மணி நேரத்திற்கு ஒரு அங்குலம் அல்லது அதற்கும் மேற்பட்ட அளவில் பனிப்பொழிவு பதிவாகும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
அத்துடன், அப்பகுதிகளில் வரலாறு காணாத அளவில் வெப்பநிலை வீழிச்சியடைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில், லூசியானா, மிசிசிப்பி மற்றும் அலபாமா உள்ளிட்ட பல மாநிலங்களின் ஆளுநர்கள் அவசர நிலையை அறிவித்துள்ளனர்.