Home இலங்கை குற்றம் துறைமுகத்தில் தலைவிரித்தாடும் பாதாள உலகக்கும்பல்களின் அச்சுறுத்தல்

துறைமுகத்தில் தலைவிரித்தாடும் பாதாள உலகக்கும்பல்களின் அச்சுறுத்தல்

0

இலங்கைத் துறைமுக அதிகார சபையின் (Sri Lanka Ports Authority) ஏல நடவடிக்கைகளில் தலைவிரித்தாடும் பாதாள உலகக்கும்பல்களின் செயற்பாடுகள் தொடர்ந்தும் நடைபெறுவதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. 

தேசிய மக்கள் சக்தி அதிகாரத்துக்கு வந்த பின்னர் துறைமுகத்தில் தேங்கிக் கிடந்த ஒரு தொகை சீனி கடந்த வியாழக்கிழமை ஏலத்தில் விடப்பட்டது.

இலங்கைச் சுங்கத்திணைக்களம் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது.

பாதாள உலகக்கும்பல்

இந்நிலையில் மிக நீண்ட காலமாக துறைமுக அதிகார சபையின் நடவடிக்கைகளில் செல்வாக்குச் செலுத்தி வரும் பாதாள உலகக்கும்பல் ஒன்று, ஏனைய வர்த்தகர்களை அச்சுறுத்தி குறித்த சீனி தொகுதியை மிகக்குறைந்த விலைக்குப் பெற்றுக் கொண்டுள்ளது.

சுமார் ஒரு இலட்சத்து முப்பத்து ஐயாயிரம் கிலோ எடை கொண்ட ஐந்து கண்டெயினர் சீனி, இவ்வாறு குறைந்த விலைக்குப் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

அதன் பின்னர் துறைமுக வளாகத்தில் வைத்தே அதனை கூடிய விலைக்கு வேறு தரப்புக்குக் கைமாற்றி விட்டு கொழுத்த இலாபம் சம்பாதித்துக் கொண்டுள்ளனர்.

இந்தப் பாதாள உலகக்கும்பல் தலைவன் லண்டனில் இருந்து செயற்படுவதாக அறியக்கிடைத்துள்ளது.

இந்நிலையில் துறைமுக அதிகார சபையின் நடவடிக்கைகளில் தலையிடும் இது போன்ற பாதாள உலகக்கும்பல்களின் செயற்பாடுகள் தொடர்பில் ஊழியர் சங்கங்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளன.

NO COMMENTS

Exit mobile version