Home இலங்கை சமூகம் இனந்தெரியாத நபர்களால் சிறீதரன் எம்.பிக்கு அச்சுறுத்தல்.!

இனந்தெரியாத நபர்களால் சிறீதரன் எம்.பிக்கு அச்சுறுத்தல்.!

0

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின்(S.Sritharan), யாழ்ப்பாணத்திலுள்ள
இல்லத்தின் முன்பாக இனந்தெரியாத நபர்களின் அச்சுறுத்தும் வகையிலான நடமாட்டம் அவதானிக்கப்பட்டுள்ளது.

குறித்த அச்சுறுத்தலானது இன்றையதினம் (28) அவதானிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

அச்சுறுத்தல்

இலக்கத்தகடுகள் மறைக்கப்பட்ட நான்கு மோட்டார்சைக்கிள்களில், முகமூடிகள்
அணிந்தவாறு வருகைதந்த இனந்தெரியாத நபர்களின் நடமாட்டம், நாடாளுமன்ற உறுப்பினர்
சிறீதரனையும், அவரது குடும்பத்தினரையும் அச்சுறுத்தும் வகையிலான திட்டமிட்ட
செயல் என கூறப்படுகின்றது.

இதனை கண்காணிப்புக் கமராக்களில் பதிவாகியுள்ள காணொளிக் காட்சிகள்
உறுதிப்படுத்துகின்றன.

NO COMMENTS

Exit mobile version