Home இலங்கை சமூகம் அநுரவின் பெயரை கூறி போராட்டத்தில் அச்சுறுத்தல்: மர்ம நபரால் குழப்பம்

அநுரவின் பெயரை கூறி போராட்டத்தில் அச்சுறுத்தல்: மர்ம நபரால் குழப்பம்

0

வவுனியாவில் (Vavuniya) காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் இன்று முன்னெடுக்கப்பட்ட
போராட்டத்தினை ஜனாதிபதி அநுரவின் ஆதரவாளர் எனக்கூறி நபர் ஒருவர்
குழப்பியமையால் பற்றமான நிலமை ஏற்ப்பட்டுள்ளது.

சர்வதேச சிறுவர் தினமான இன்று (01) காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால்
வவுனியா பழையபேருந்து நிலையப்பகுதியில் ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, அந்தபகுதிக்கு வந்த இனம் தெரியாத நபர் ஒருவர் இது அநுரவின் ஆட்சி
நீங்கள் எல்லாம் வயிறு வளர்க்கிறீர்கள்.உங்களுக்கு பணம் வருகின்றது. என
போராட்டத்தில் ஈடுபட்ட தாய்மாருடன் முரண்பாட்டில் ஈடுபட்டுள்ளார்.

முரண்பாடு

உங்களை காவல்துறையினரிடம் பிடித்துகொடுப்பேன். நான் அநுரகுமாரவுடனேயே இரு வருடமாக நிற்கிறேன். காவல்துறையினரும் புலனாய்வு பிரிவும் வந்து இப்போது உங்களை கைதுசெய்வார்கள்.

நாய்களே எல்லாரும்
வீடுசெல்லுங்கள் என்று ஒருமையில் கண்டபடி திட்டியுள்ளார்.இதனையடுத்து காணாமல் போன
உறவுகளும் அவருடன் முரண்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் குறித்த பகுதியில் குழப்பநிலை ஏற்ப்பட்டது.சிறிதுநேரத்தின் பின்னர்
குறித்த நபர் அவர்களை அச்சுறுத்திய படி அந்த பகுதியில் இருந்து
கலைந்துசென்றுள்ளார்.

https://www.youtube.com/embed/5bojshd3g4A

NO COMMENTS

Exit mobile version