Home முக்கியச் செய்திகள் வெளிநாட்டுத் துப்பாக்கியுடன் காரில் வந்த மூவர் சிக்கினர்

வெளிநாட்டுத் துப்பாக்கியுடன் காரில் வந்த மூவர் சிக்கினர்

0

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் காரில் வந்த
மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காலி துறைமுக காவல் பிரிவில் உள்ள மீன்பிடித் துறைமுகத்துக்கு அருகில்
வைத்து நேற்று(30) புதன்கிழமை மேற்படி மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவல்

காலி துறைமுக காவல் நிலைய அதிகாரிகள் குழுவொன்றுக்குக் கிடைத்த இரகசிய
தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இவர்கள் கைது
செய்யப்பட்டுள்ளனர்.

தொடந்துவ மற்றும் சீனக்குடா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 45, 54 மற்றும் 56
வயதுடைய நபர்களே கைது செய்யப்பட்டவர்களாவர்.

மேலதிக விசாரணை

 சந்தேகநபர்களிடம் இருந்து வெளிநாட்டுத் துப்பாக்கி, 9 மில்லிமீற்றர்
தோட்டாக்கள் 5 என்பன காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் காலி துறைமுக காவல்துறையினர் மேற்கொண்டு
வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version