Home இலங்கை குற்றம் யாழில் சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட மூவர் கைது

யாழில் சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட மூவர் கைது

0

யாழ்.வடமராட்சி, கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட முயன்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெற்றிலைக்கேணி கடற்படையினர் இன்று (02.05.2024) மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

இலங்கையில் ஹீரோவாக மாறிய நடத்துனர் : நெகிழ்ச்சியை ஏற்படுத்திய செயல்

கைது நடவடிக்கை

இதன்போது ஒளி பாய்ச்சி குறுகிய கண்களை கொண்ட (சுருக்குவலை) வலையை பயன்படுத்தி
கடற்றொழிலில் ஈடுபட்டமையினால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக
வெற்றிலைக்கேணி கடற்படை தெரிவித்துள்ளது.

மேலும் கைது செய்யப்பட்ட நபர்கள் கட்டைக்காட்டை சேர்ந்தவர்கள் என்பதோடு உடமைகளுடன்
மேலதிக சட்ட நடவடிக்கைக்காக யாழ். கடற்றொழில் பரிசோதகரிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை கூறியுள்ளது.

இஸ்ரேல் தொடங்க இருக்கின்ற அடுத்த யுத்தம்!! எங்கே.. எப்போது??

நாட்டு மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 

NO COMMENTS

Exit mobile version