Home இலங்கை சீனாவுடனான உடன்படிக்கைகளை இலங்கையில் விரைந்து செயற்படுத்த நடவடிக்கை

சீனாவுடனான உடன்படிக்கைகளை இலங்கையில் விரைந்து செயற்படுத்த நடவடிக்கை

0

Courtesy: Sivaa Mayuri

இலங்கைக்கான சீனத் தூதுவர் ஸி சென்ஹொங் (Qi Zhenhong) பிரதமர் தினேஸ் குணவர்தனவை(Dinesh Gunawardena) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

குறித்த சந்திப்பானது இன்று(02.05.2024) அலரி மாளிகையில் இடம்பெற்றுள்ளது.

புலம்பெயர் ஈழத்தமிழ் முதலீட்டாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பதற்றம்! சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

இதன்போது இரண்டு நாடுகளுக்குமிடையில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்கள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை விரைவாக நடைமுறைப்படுத்துவதற்கான வழிகள் மற்றும் வழிமுறைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

2024 மார்ச் மாதத்தில் இலங்கையின் பிரதமர் சீனாவுக்கு சென்றிருந்தபோதே இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.

புரிந்துணர்வு ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்துவது இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பில் புதிய அத்தியாயத்தை ஆரம்பிக்கும் என இலங்கையின் பிரதமர் இதன்போது தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் கடனை மறுசீரமைத்தல் மற்றும் பொருளாதார சவால்களை எதிர்கொள்வதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு சீனாவின் தொடர்ச்சியான ஆதரவை உறுதிப்படுத்துவதாக சீனத் தூதுவர் இந்த கலந்துரையாடலின் போது குறிப்பிட்டுள்ளார்.  

எரிவாயு விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் – நாளை முதல் புதிய விலை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட பதற்றநிலைமை: இந்தியா வெளியிட்ட அவசர அறிக்கை

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW

NO COMMENTS

Exit mobile version