Home இலங்கை அரசியல் முன்னாள் அமைச்சர்கள் மூவர் விரைவில் கைது..!

முன்னாள் அமைச்சர்கள் மூவர் விரைவில் கைது..!

0

முன்னைய அரசாங்க காலத்தில் அமைச்சர்களாகப் பதவி வகித்த மூன்று அரசியல்வாதிகள் விரைவில் கைது செய்யப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.

சட்டவிரோத வாகன பயன்பாட்டுக் குற்றச்சாட்டின் கீழேயே இவர்கள் கைது செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு செய்யப்படாத வாகனங்களைப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் ஏற்கெனவே முன்னாள் அமைச்சர்கள் மூவர் கைது செய்யப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெளியான தகவல்

இந்நிலையில், எதிர்வரும் நாட்களில் மேலும் மூன்று முன்னாள் அமைச்சர்கள் அதே குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னைய அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் ஒருவரும் அதில் உள்ளடங்கியிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.  

NO COMMENTS

Exit mobile version