Home முக்கியச் செய்திகள் போலி நாணயத்தாள்களுடன் கைதான தமிழ் அரசியல் கட்சி ஒன்றின் உறுப்பினர்கள்

போலி நாணயத்தாள்களுடன் கைதான தமிழ் அரசியல் கட்சி ஒன்றின் உறுப்பினர்கள்

0

5000 ரூபா போலி நாணயத்தாள்களுடன்  தமிழ் அரசியல் கட்சி ஒன்றின் 03 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம் (19.10.2024) அக்கரைப்பற்று (Akkaraipattu) – பாலமுனை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அக்கரைப்பற்று காவல்துறை விசேட அதிரடிப்படையினர் (Special Task Force ) முன்னெடுத்த திடீர் வீதிச் சோதனை நடவடிக்கையின் போது, கார் ஒன்றை சோதனைக்கு உட்படுத்தினர். 

பிரதான சந்தேகநபர்

இதன் போது போலி நாணயத்தாள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டதோடு, அவருடன் காரில் பயணித்த மேலும் இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கைதான சந்தேகநபர்கள் 34, 43 மற்றும் 46 வயதுடைய களுவாஞ்சிக்குடி (Kaluwanchikudy) மற்றும் மட்டக்களப்பு (Batticaloa) பகுதிகளைச் சேர்ந்தவர்களென தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 10 போலி நாணயத்தாள்கள், காணி உறுதிகள், மண் அனுமதிப்பத்திரங்கள், மற்றும் 200 துண்டுபிரசுரங்கள் என்பவற்றையும் கைப்பற்றியுள்ளனர்.

மேலதிக விசாரணை

கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, இவர்கள் தமிழ் அரசியல் கட்சி ஒன்றின் உறுப்பினர்கள் என தெரியவந்துள்ளது.

இதனையடுதது கைது செய்தவர்களை அக்கரைப்பற்று நீதிமன்ற நீதவான் முன்னிலையில் முன்னிலைபடுத்தப்பட்டதை அடுத்து இவர்களை எதிர்வரும் 22 வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை விசேட அதிரடிப்படையினரும் அக்கரைப்பற்று காவல்துறையினரும் மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version