Home இலங்கை சமூகம் யாழில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட மூவர் காயம்: காவல்துறை விசாரணை

யாழில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட மூவர் காயம்: காவல்துறை விசாரணை

0

யாழில் (Jaffna) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் குழந்தை ஒன்றும், இரு பெண்களும் காயமடைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் – கீரிமலை (Keerimalai) பகுதியில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரித்துள்ளனர்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வீதியில் மோட்டார் சைக்கிளில் குழந்தையுடன் பயணித்த இரு பெண்களைப் பின்னால் வேகமாகப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றில் பயணித்த இரு இளைஞர்கள் மோதி விட்டு அந்த இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

காவல்துறை விசாரணை

இளைஞர்கள் இருவரும் போதையில், நிதானமின்றி மோட்டார் சைக்கிளை விபத்தை ஏற்படுத்தும் விதமாகவும் வீதியில் பயணித்தோருக்கு இடையூறு விளைவிக்கும் விதமாகவும் ஓட்டிச் சென்றுள்ளார்.

அவ்வாறு மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தே, முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளை மோதித்தள்ளி விட்டுத் தப்பிச் சென்றனர் எனவும் விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் இளவாலைப் காவல்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில், விபத்தை ஏற்படுத்தி விட்டுத் தப்பிச் சென்ற மோட்டார் சைக்கிளை அடையாளம் கண்டுள்ளதாகவும், விபத்தை ஏற்படுத்திய இருவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளனர். 

Source: https://ibctamil.com/article/three-injured-in-an-accident-in-jaffna-1721183543

NO COMMENTS

Exit mobile version