Home இலங்கை சமூகம் யாழில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் படுகாயம்

யாழில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் படுகாயம்

0

யாழில் (Jaffna) இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

குறித்த விபத்து இன்று யாழ்ப்பாணம் – உப்புவேலி சந்திக்கு அண்மையில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழில் இருந்து நெல்லியடி (Nelliady) நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியும், நெல்லியடியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த வானும் யாழ் உப்புவேலி சந்திக்கு அண்மையில் மோதி விபத்து சம்பவித்துள்ளது.

மேலதிக விசாரணை

இந்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த இருவரும், வானில் பயணித்த ஒருவரும் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை நெல்லியடி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.  

Source: https://ibctamil.com/article/three-injured-in-road-accident-in-jaffna-1732030211

NO COMMENTS

Exit mobile version