Home முக்கியச் செய்திகள் அமெரிக்காவில் பாடசாலையில் இடம்பெற்ற கொடூரம் : மூன்று பேர் பலி

அமெரிக்காவில் பாடசாலையில் இடம்பெற்ற கொடூரம் : மூன்று பேர் பலி

0

அமெரிக்காவில் (United States) பாடசாலையொன்றில் துப்பாக்கிச்சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த சம்பவம் விஸ்கான்சின் மாநிலத்தில் உள்ள அபண்டன்ட் லைஃப் கிறிஸ்தவ பள்ளியில் இன்று (16) இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளதோடு ஆறு பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று பேர் பலி

தாக்குதலை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் அதே பாடசாலையில் கல்வி பயிலும் மாணவனும் உயிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், அப்பகுதிக்கு மக்கள் செல்வதை தவிர்க்குமாறு காவல்துறையினர் அறிவுருத்தியுள்ளனர்.

மேலும், அப்பகுதியில் வீதிகளும் தற்போது மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version