Home இலங்கை அரசியல் பொதுஜன பெரமுனவின் மூன்று எம்.பிக்களின் உறுப்புரிமை அதிரடியாக இடைநிறுத்தம்

பொதுஜன பெரமுனவின் மூன்று எம்.பிக்களின் உறுப்புரிமை அதிரடியாக இடைநிறுத்தம்

0

தமது கட்சியின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களின் உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, அநுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன, இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பவித்ராதேவி வன்னியாராச்சி மற்றும் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன ஆகியோரின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டமைக்கான காரணம்

கடந்த ஜூலை மாதம் 29ஆம் திகதி நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் அரசியல் சபைக் கூட்டத்தில் அக்கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவளிக்கும் தீர்மானத்திற்கு எதிராக வேறொரு வேட்பாளரை ஆதரித்தமைக்காக அவர்களது கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://tamilwin.com/article/three-mps-of-podujana-peramuna-disqualified-1726831502

NO COMMENTS

Exit mobile version