Home இலங்கை சமூகம் கடலில் நீராட சென்ற மூவர் மாயம்: அம்பாறையில் சம்பவம்

கடலில் நீராட சென்ற மூவர் மாயம்: அம்பாறையில் சம்பவம்

0

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் காவல்துறை பிரிவிலுள்ள சங்கமன்கண்டி உமிரி கடற்கரையில் மூவர் காணமல் போயுள்ளனர்.

குறித்த சம்பவமானது, இன்று (25) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் தாண்டியடி உமிரி கடற்கரையில்
நீராடச்சென்ற தந்தை மகன் மற்றும் அவர்களின் உறவினரின் மகன் என மூவர்
காணாமல் போயுள்ளனர்.

மேலதிக விசாரணை

இவ்வாறு காணாமல் போனவர்களை தேடும் பணியில் கடற்படையினர், கடற்றொழில் சமுகத்தினர் மற்றும் பொதுமக்களும்
தீவிரமாக ஈடுபட்டுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கடற்கரையில் பொழுதை கழிக்க சென்ற தாண்டியடி உமிரி கிராமத்தை சேர்ந்த 38, 15, 18, வயதை
சேர்ந்தவர்களே இவ்வாறு கடல் அலையில் சிக்கி காணாமல் போயுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version