Home இலங்கை சமூகம் நாடு பூராகவும் பெரும் கொள்ளைகள் : காவல்துறை சுற்றிவளைத்த யாழ்.இளைஞர் குழு

நாடு பூராகவும் பெரும் கொள்ளைகள் : காவல்துறை சுற்றிவளைத்த யாழ்.இளைஞர் குழு

0

யாழ்ப்பாணத்தில் இருந்து வந்து கம்பளை கலஹா போன்ற பல்வேறு பகுதிகளுக்குச்
சென்று 21ற்க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் நகைக்கடைகளை உடைத்து பல கோடி ரூபா
பெறுமதியான சொத்துக்கள், தங்கம், கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் பொருட்களை
திருடிச் சென்ற இளைஞர்கள் குழுவொன்றை கம்பளை கலஹா காவல்துறையினர் இன்று கைது
செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் பகுதியில் ஆறு திருட்டுகளும், வவுனியா பகுதியில் ஏழு
திருட்டுகளும், கம்பளை கலஹா பகுதியில் ஏழு திருட்டுகளும், நுவரெலியா கந்தபொல
பகுதியில் ஏழு திருட்டுகளும் சந்தேகநபர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

பிடியாணைகள்

அந்தந்த பகுதிகளில் உள்ள தங்கக்கடைகள், கோவில்களில் உள்ள உண்டியல்கள் மற்றும்
கையடக்க தொலைபேசிகள் மற்றும் பணம் ஆகியவை இவர்களின் முக்கிய இலக்குகள் என காவல்துறையினர்
கண்டுபிடித்துள்ளனர்.

அதன்படி, கலஹா பகுதியில் உள்ள மூன்று தங்க கடைகள், கோவில்களையும் உடைத்து தங்கப் நகைகள் உள்ளிட்ட பொருட்கள் திருடியுள்ளதுடன்,மருந்துக் கடையொன்றில் இருந்த 12 இலட்சம் ரூபாய் பணம் திருடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், யாழ்ப்பாணம் எல்லைக்குள் மாத்திரம் இந்த சந்தேக நபர்களுக்கு ஒன்பது
பிடியாணைகள் உள்ளதாக கலஹா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஆரம்பகட்ட விசாரணை

யாழ்ப்பாணம் பகுதியில் தாலிகொடி, தங்க நெக்லஸ்கள் மற்றும் பணம் திருடப்பட்டு
வீடுகளுக்குச் சென்று கத்தி, போன்ற ஆயுதங்களை எடுத்துச் சென்று
குடியிருப்பாளர்களை பயமுறுத்தியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 19,21,22,23,26,33 வயதுகளை கொண்டவர்கள்
எனவும், இவர்கள் இவ்வாறு கொள்ளையடித்த பணத்தை தங்களது போதைப்பொருள் பாவனைக்கு
செலவலித்துள்ளதாகவும் காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம்
தெரியவந்துள்ளது.

இவர்களால் நாடளாவிய ரீதியில் திருடப்பட்ட தங்கக் கட்டிகள் சில மீட்கப்பட்டு
யாழ்ப்பாணப் பகுதியில் விற்பனை செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்கள் அனைவரும்
கண்டி நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர். 

https://www.youtube.com/embed/mgo_wPtllg4

NO COMMENTS

Exit mobile version