Home அமெரிக்கா 250 வருடங்களுக்கு பிறகு தேசிய பறவையை தீர்மானித்த அமெரிக்கா

250 வருடங்களுக்கு பிறகு தேசிய பறவையை தீர்மானித்த அமெரிக்கா

0

அமெரிக்காவின் அதிகாரபூர்வ தேசிய பறவையாக கழுகை தேர்தெடுப்பதற்கான மசோதாவில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் கையெழுத்திட்டுள்ளார்.

1782ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்காவின் தேசிய சின்னமாக உள்ள கழுகு, முக்கிய ஆவணங்களில் குத்தப்படும் முத்திரையாகவும் உள்ளது.

எனினும், அமெரிக்காவின் அதிகாரபூர்வ தேசிய பறவையாக கழுகு இதுவரை அங்கீகரிக்கப்பட்டிருக்கவில்லை.

கையெழுத்திட்ட பைடன்

இவ்வாறான பின்னணியில், கழுகை தேசிய பறவையாக அங்கீகரிக்கும் மசோதா ஒன்று கடந்த வாரம் காங்கிரஸால் முன்வைக்கப்பட்டு பைடனின் கையெழுத்துக்காக சமர்ப்பிக்கப்பட்டது.

இதனையடுத்து, கிறிஸ்துமஸின் முந்தையநாள் கொண்டாட்டத்தினை முன்னிட்டு குறித்த மசோதாவில் பைடன் கையெழுத்திட்டுள்ளார்.

இந்நிலையில், 250 வருடங்களாக தேசிய பறவையாக கருதப்பட்ட கழுகு, தற்போது உத்தியோகபூர்வமாகியுள்ளது என தேசிய பறவை முன்முயற்சியின் இணைத் தலைவர் ஜெக் டேவிஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version