Home இலங்கை அரசியல் ஜனாதிபதியின் பக்கம் தாவவுள்ள எம் பிக்கள்: அம்பலப்படுத்தும் இராஜாங்க அமைச்சர்

ஜனாதிபதியின் பக்கம் தாவவுள்ள எம் பிக்கள்: அம்பலப்படுத்தும் இராஜாங்க அமைச்சர்

0

தமிழ்த் தேசிய பரப்பில் உள்ள இரண்டு அல்லது 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணையவுள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் (Suren Raghavan
) தெரிவித்துள்ளார்.

கொழும்பில் (colombo) நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் இராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் இந்த ஊடக சந்திப்பில் கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார்,

தமிழ் முற்போக்கு கூட்டணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான வேலுசாமி இராதாகிருஸ்ணன் (Velusami Radhakrishnan) மற்றும் மயில்வாகனம் உதயகுமார் ஆகியோரும் விரைவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணையவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தேர்தல் தொடர்பான கருத்து கணிப்பு

நாட்டில் ஜனாதிபதி தேர்தல் சூடுப்பிடித்துள்ள நிலையில் தனியார் நிறுவனமொன்று தேர்தல் தொடர்பான கருத்து கணிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

இதனடிப்படையில், நடைபெறப்போகும் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayaka) ஆகியோருக்கான
சாதகநிலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கான சாதகமான நிலைமை 40 புள்ளிகள் வீதம் அதிகரித்துள்ளதாக கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் ரணில் விக்ரமசிங்கவிற்கு தமது ஆதரவை தெரிவித்து கட்சித்தாவல்களில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version