Home இலங்கை குற்றம் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு படகில் வர முயன்ற முல்லைத்தீவு பெண் உட்பட மூவர் கைது

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு படகில் வர முயன்ற முல்லைத்தீவு பெண் உட்பட மூவர் கைது

0

தமிழகம் – இராமேஸ்வரத்தில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு படகில் வர முயன்ற
முல்லைத்தீவு பகுதியை சேர்ந்த பெண் மற்றும் இரண்டு முகவா்களை இந்திய (Indian) பொலிஸார்
கைது செய்துள்ளனர்.

இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் துறைமுக பொலிஸ் நிலைய உதவி ஆய்வாளா் கடற்கரைப் பகுதியில் கண்காணிப்பு பணியில்
ஈடுபட்டிருந்த போது சந்தேகத்துக்கிடமான விதத்தில் நின்றிருந்த பெண் ஒருவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளார். 

இதன்போது, அந்தப் பெண் இலங்கைத் தமிழில் பேசியுள்ளார். 

இதையடுத்து, அவரை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில், அவா் முல்லைத்தீவு – பாண்டியன் குளத்தைச் சோ்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. 

மேலும் அவர், கடந்த 2013ஆம் ஆண்டு
இலங்கையில் இருந்து மருத்துவ சிகிச்சைக்காக 6 மாத விசா பெற்று சென்னைக்கு சென்றுள்ளார்.

 தையல் வேலை 

இதனை தொடர்ந்து, புதுச்சேரியில் 24 நாட்கள் தங்கியிருந்த குறித்த பெண், சென்னை – வளசரவாக்கம் பகுதியில் உள்ள
இலங்கையை சோ்ந்த நபர் ஒருவரின் வீட்டில் கடந்த 10 ஆண்டுகளாக தையல் வேலையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

அதேவேளை, கடந்த ஜூன் 30ஆம் திகதி மதுரைக்கு சென்று, கூடல் நகா் பகுதியில்
இலங்கையைச் சோ்ந்த  நபர் ஒருவர் வீட்டில் தங்கியிருந்துள்ளார்.

இதன்பின்னா், உறவினா்
உதவியுடன் தங்கச்சிமடத்தைச் சோ்ந்த 35 வயதுடைய நபர் மற்றும் 17 வயதுடைய இளைஞர்
ஆகியோரை தொடா்பு கொண்டு, இலங்கைக்கு படகில் அழைத்துச் செல்வதற்கு 50 ஆயிரம்
ரூபா பணம் தருவதாக கூறியுள்ளார்.

பொலிஸ் விசாரணை 

இதன்படி, இலங்கைக்கு படகில் செல்வதற்காகவே அவர் இராமேஸ்வரத்துக்கு வந்துள்ளமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், இது குறித்து இந்திய பொலிஸார் வழக்கு தாக்கல் மேற்கொண்டு, குறித்த பெண் மற்றும் முகவா்களாகச் செயற்பட்ட நபர்களையும் கைது செய்துள்ளனா்.

அதேவேளை, குறித்த சம்பவத்துடன் தொடா்புடைய 39 வயதுடைய மற்றுமொரு நபரையும் பொலிஸார் தேடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version