Home முக்கியச் செய்திகள் கொழும்பிலிருந்து நுவரெலியா நோக்கி பயணித்த வெளிநாட்டவர்களுக்கு நேர்ந்த கதி

கொழும்பிலிருந்து நுவரெலியா நோக்கி பயணித்த வெளிநாட்டவர்களுக்கு நேர்ந்த கதி

0

கொழும்பிலிருந்து நுவரெலியா நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளானதில் இரண்டு வெளிநாட்டவர்கள் காயமடைந்து வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் இரண்டு ஸ்லோவாக்கியா நாட்டவர்கள் காயமடைந்ததாக வட்டவளை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்தானது இன்று (26) பிற்பகல் 3 மணியளவில் ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை குயில்வத்த பகுதியில் இடம்பெற்றுள்ளது.

விபத்து சம்பவம் 

வாடகைக்கு எடுக்கப்பட்ட முச்சக்கர வண்டியில் பயணித்த இரண்டு வெளிநாட்டவர்களில் ஒருவர் முச்சக்கர வண்டியை ஓட்டிச் சென்றுள்ளார்.

இதன்போது, அதிவேகத்தில் இயக்கப்பட்ட முச்சக்கரவண்டி, வேகக் கட்டுப்பாட்டை இழந்து, வீதியை விட்டு விலகி, தேயிலைத் தோட்டத்திற்குள் கவிழ்ந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

காயமடைந்த இருவரின் நிலை மோசமாக இல்லை என்றாலும், முச்சக்கர வண்டி கடுமையாக சேதமடைந்துள்ளதாக வட்டவளை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

NO COMMENTS

Exit mobile version