Home முக்கியச் செய்திகள் தமிழர் பகுதியில் சுற்றிவளைக்கப்பட்ட விடுதி : சிக்கிய மூன்று பெண்கள்

தமிழர் பகுதியில் சுற்றிவளைக்கப்பட்ட விடுதி : சிக்கிய மூன்று பெண்கள்

0

வவுனியாவில் தவறான தொழிலில் ஈடுபட்ட மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் இன்று (22) இடம்பெற்றுள்ளதாக மாவட்ட
மது ஒழிப்பு பிரிவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வவுனியா மாவட்ட மது ஒழிப்பு காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மாவட்ட
மது ஒழிப்பு பிரிவு காவல்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

தவறான தொழில்

இதையடுத்து, தேக்கவத்தை
பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தவறான தொழிலில் ஈடுபட்ட மூன்று பெண்கள் கைது
செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 20 தொடக்கம் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, அவர்கள்
சுந்தரபுரம், குழுமாட்டு சந்தி, கல்மடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களெனவும், மேலதிக விசாரணைகளின் பின் அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/three-women-arrested-for-prostitution-in-vavuniya-1734875783?itm_source=parsely-popular

NO COMMENTS

Exit mobile version