Home இலங்கை சமூகம் யாழில் தனியார் விடுதிக்குள் சிக்கிய மூன்று யுவதிகள் : எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

யாழில் தனியார் விடுதிக்குள் சிக்கிய மூன்று யுவதிகள் : எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

0

யாழ்ப்பாணத்தில் (Jaffna) உள்ள தனியார் விடுதி ஒன்றில் சந்தேகத்திற்கு இடமான முறையில் தங்கியிருந்த மூன்று யுவதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தனியார் விடுதி ஒன்றில் சந்தேகத்திற்கு இடமான முறையில் ஆள் நடமாட்டம் உள்ளதாக யாழ் காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த விடுதிக்கு காவல்துறையினர் சென்று சோதனையிட்டுள்ளனர்.

இந்தநிலையில், விடுதியில் பதிவுகள் இன்றி தங்கியிருந்ததுடன் தமது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்த தவறிய மூன்று யுவதிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணை

இதனடிப்படையில், கைது செய்யப்பட்ட யுவதிகளை விசாரணைகளின் பின்னர் யாழ் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, சந்தேக நபர்களான மூன்று யுவதிகளையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், எதிர்வரும் 26 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Source: https://ibctamil.com/article/three-women-trapped-inside-private-hostel-jaffna-1724071186

NO COMMENTS

Exit mobile version