Home சினிமா முதல் நாள் தக் லைஃப் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

முதல் நாள் தக் லைஃப் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

0

தக் லைஃப்

இந்த ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று தக் லைஃப். நாயகனுக்கு பின் மணி ரத்னம் – கமல் ஹாசன் கூட்டணியில் இப்படம் உருவானதால், இப்படத்தின் மீது கூடுதல் எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்திருந்தனர்.

இப்படத்தில் கமலுடன் இணைந்து சிம்பு முதல் முறையாக நடித்துள்ளார். இவர்கள் இருவரும் எப்போது இணைந்து நடிப்பார்கள் என ஆவலுடன் ரசிகர்கள் காத்திருந்தனர். அது தக் லைஃப் படத்தில் நடந்துள்ளது.

மேலும் த்ரிஷா, அபிராமி, நாசர், ஜோஜு ஜார்ஜ் என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி நேற்று திரையரங்கில் வெளிவந்த இப்படத்திற்கு மோசமான விமர்சனங்கள் கிடைத்துள்ளது. காரணம், படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை.

முதல் நாள் வசூல்

இந்த நிலையில், தக் லைஃப் திரைப்படம் உலகளவில் முதல் நாள் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் முதல் நாள் ரூ. 46 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

முதல் நாள் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இனி வரும் நாட்களில் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Source: https://cineulagam.com/article/thug-life-movie-first-day-worldwide-box-office-1749178258

NO COMMENTS

Exit mobile version