Home சினிமா 65 நாட்கள்.. தக் லைஃப் படம் குறித்து அதிரடி வீடியோ ஒன்றை வெளியிட்ட படக்குழு

65 நாட்கள்.. தக் லைஃப் படம் குறித்து அதிரடி வீடியோ ஒன்றை வெளியிட்ட படக்குழு

0

தக் லைஃப்

தமிழ் சினிமாவின் மாபெரும் வெற்றி கூட்டணி என்றால் அது கமல் ஹாசன் மற்றும் மணி ரத்னம் கூட்டணி தான். இவர்கள் இருவரும் முதல் முறையாக இணைந்தபோது உருவான நாயகன் திரைப்படம் என்றுமே நம் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளது.

நாயகன் படத்திற்கு பின் இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்துள்ள திரைப்படம் தான் தக் லைஃப். கமல் ஹாசனுடன் இணைந்து இப்படத்தில் சிம்பு, த்ரிஷா,அபிராமி என நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறார்கள்.

ஒரு வருடம் கூட சேர்ந்து வாழல, குழந்தை இல்லை.. நடிகை சுகன்யா ஓபன் டாக்

அதிரடி வீடியோ

கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் வரும் ஜூன் 5ஆம் தேதி திரையரங்கில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில், தக் லைப் படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகும் என படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.

அந்த வீடியோவில் இன்னும் திரைப்படம் வெளியாக 65 நாட்கள் மட்டுமே இருக்கிறது என குறிப்பிட்டுள்ளனர். மேலும், கமல்ஹாசனின் சிறுவயது புகைப்படத்தில் இருந்து தற்போது வரை உள்ள புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.     

NO COMMENTS

Exit mobile version