Home சினிமா தண்டர்போல்ட்ஸ் திரை விமர்சனம்

தண்டர்போல்ட்ஸ் திரை விமர்சனம்

0

மார்வல் தங்களுடைய 4 பேஸ் முடிந்து 5வது பேஸ் நோக்கி பயணித்து வருகிறது. அதில் முதல் விதையாக வந்துள்ள தண்டர்போல்ட் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியதா? பார்ப்போம்.

கதைக்களம்

எலனா படத்தின் ஆரம்பத்திலேயே ஒரு பெரிய மிஷனை முடித்துவிட்டு, அவருக்கு உத்தரவிடும் வெலிடினாவிடம் தனக்கு புகழ் வரும்படியான வேலைகளை கொடுங்கள் என்கிறார்.

அதற்காக அவர் ஒரு ப்ராஜெக்ட் கொடுக்க, அந்த இடத்தில் மேலும் 3 சூப்பர் ஹீரோக்கள் வர, பிறகு தான் தெரிகிறது, ஒருவரை ஒருவர் கொல்ல தான் அவர் அனுப்பியுள்ளார் என்று.

பிறகு அங்கிருந்து பாப் என்பவரை காப்பாற்றி எல்லோரும் தப்பிக்கின்றனர். அப்போது தான் தெரிகிறது பாப்-யை வெலிட்டினா தான் உருவாக்கியுள்ளார்.

அவரை வைத்து இந்த சூப்பர் ஹீரோஸை அழிக்க வெலிட்டினா சதி செய்ய, பிறகு என்ன ஆனது என்பதே மீதிக்கதை. 

டூரிஸ்ட் ஃபேமிலி திரைவிமர்சனம்

படத்தை பற்றிய அலசல்

மார்வல் கண்டிப்பாக ஒரு மிகப்பெரும் யுனிவர்ஸை உருவாக்கி, தங்கள் ரசிகர்களை தக்க வைக்க வேண்டும் என்ற நிரூபந்தத்தில் இருக்க, அதற்காக இந்த தண்டர்போல்ட் களத்தை தேர்ந்தெடுத்துள்ளனர்.

எலானாக வரும் ப்ளோரசா ப்ளாக் விட ரசிகர்களை அப்படியே தட்டி தூக்கி விடுவார், படம் முழுவதும் அவர் தான் முதன்மை கதாபாத்திரமாக மிரட்டியுள்ளார்.

ஆனால், இவரை தாண்டி எந்த ஒரு கதாபாத்திரமும் மனதில் நிற்கவில்லை, கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரம் எல்லாம் முதலில் ஏற்க கஷ்டமாக தான் உள்ளது.

பாப் என்ற மிக வலுவான கதாபாத்திரம் ஒன்றை இதில் உருவாக்கியுள்ளனர், அந்த கதாபாத்திரம் எடுக்கும் டார்க் ஷேட், தானோஸ் போல் மிக வலுவாக மாறுகிறது.

பாப்-யை தடுத்து நிறுத்த அந்த ஷேடோ உள்ளே சென்று பாப் மனதை மாற்றும் காட்சி ரசிக்க வைக்கிறது.

அதே நேரத்தில் மார்வல் என்றே இருக்கும் காமெடி காட்சிகள் இதில் மிக குறைவு என்பது ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம்.

அதேபோல் கூஸ்பம்ஸ் மொமண்ட் என்பதும் பெரிதாக இல்லை. 

க்ளாப்ஸ்

எலானா கதாபாத்திரம்

படத்தின் டெக்னிக்கல் விஷயம், குறிப்பாக சிஜி காட்சிகள்.


பல்ப்ஸ்

பெரிய நடிகர்கள் நமக்கு பரிச்சயம் இல்லாத நடிகர்கள் தான் அடுத்த அவெஞ்சர்ஸ் என்பது கொஞ்சம் ரசிகர்களுடன் ஒட்டவில்லை.

பெரிய கூஸ்பம்ஸ் மொமண்ட் இல்லாதது. 

மொத்தத்தில் இந்த தண்டர்போல்ட் ஆஹா ஓஹோவும் இல்லை, அதற்காக மோசமும் இல்லை. 

NO COMMENTS

Exit mobile version