Home சினிமா துப்பாக்கி, போக்கிரி படங்களின் ரீ ரிலீஸ்.. இந்தியாவில் மட்டுமே இவ்வளவு வசூலா

துப்பாக்கி, போக்கிரி படங்களின் ரீ ரிலீஸ்.. இந்தியாவில் மட்டுமே இவ்வளவு வசூலா

0

ரீ ரிலீஸ்

விஜய்யின் நடிப்பில் தரணி இயக்கத்தில் உருவாகி 2004ஆம் ஆண்டு வெளிவந்த கில்லி திரைப்படம் சமீபத்தில் ரீ ரிலீஸ் செய்திருந்தனர்.

இப்படம் உலகளவில் ரூ. 25 கோடிக்கும் மேல் வசூல் செய்து ரீ ரிலீஸில் புதிய வசூல் சாதனையை படைத்தது. இதை தொடர்ந்து விஜய்யின் மற்ற சூப்பர்ஹிட் திரைப்படங்களையும் ரீ ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர்.

GOAT பட சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய முக்கிய சேனல்! அதிகாரபூர்வ அறிவிப்பு

அதன்படி, நாளை ஜூன் 22ஆம் தேதி விஜய்யின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 21ஆம் தேதி இன்று விஜய்யும் துப்பாக்கி மற்றும் போக்கிரி ஆகிய படங்களை ரீ ரிலீஸ் செய்துள்ளனர்.

அட்வான்ஸ் புக்கிங்

அப்படங்களின் முதல் நாள் இந்தியளவில் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி முதல் நாள் நடந்த அட்வான்ஸ் புக்கிங்கில் துப்பாக்கி திரைப்படம் ரூ. 32 லட்சம் வசூல் செய்துள்ளது. தமிழ்நாட்டில் ரூ. 21 லட்சம் வசூல் செய்துள்ளது.

அதே போல் போக்கிரி திரைப்படம் இந்தியளவில் ரூ. 28 லட்சமும், தமிழகத்தில் ரூ. 13 லட்சம் வரை அட்வான்ஸ் புக்கிங் செய்யப்பட்டுள்ளது என தகவல் கூறுகின்றனர். ஆனால், கில்லி ரீ ரிலீஸ் அளவிற்கு இந்த வசூல் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version