பேச்சவார்த்தை நடத்திய போதே இலங்கை அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளை ஏற்றுக் கொண்டது என்பது தான் உண்மை என நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
பேச்சுவார்த்தை
மேலும் தெரிவிக்கையில்,
தமிழீழ விடுதலைப் புலிகள் என்பதை இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொண்டது. இலங்கை அரசாங்கம் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தியதை எல்லோரும் அறிவார்கள். விடுதலைப் புலிகள் போராட ஆரம்பித்தது அகிம்சை வழியில்.
எங்களுடைய பெரியவர்கள் மற்றும் எங்களுடைய தலைவர்கள் போராடி முடியாத நிலையில் தான் விடுதலைப் புலிகள் தோன்றினார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். விடுதலைப் புலிகளை இப்போது பயங்கரவாதம் என்றெல்லாம் சொல்லி சொல்லலாம்.
பிழையான செயற்பாடு
ஆனால் பயங்கரவாதம் என்றால் இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தியதே பிழை என்று தான் சொல்ல வேண்டும். பேச்சுவார்த்தை நடத்துகிறோம் என்றால் விடுதலைப் புலிகளை ஏற்றுக் கொள்கிறோம் என்ற வகையில் தான் செய்தது.
ஆனால் விடுதலைப் புலிகளின் தாக்கம் இன்றும் மக்களிடம் இருக்கிறது. அதற்கு காரணம் என்னவென்றால் முன்னைய அரசாங்கங்கள் செய்த அட்டூழியங்கள்.
விடுதலைப் புலிகள் இருக்கும் போது மக்களின் காணிகள் பாதுகாக்கப்பட்டன. மக்கள் விவசாயம் செய்தார்கள். ஆனால் இப்போது காணிகள் சூறையாடப்பட்டிருக்கின்றன. இவ்வாறிருக்கையில் மக்கள் எவ்வாறு விடுதலைப் புலிகளை மறப்பார்கள் என சுட்டிக்காட்டியுள்ளார்.
