Home இலங்கை அரசியல் பதுளைக்கு சென்ற தொடருந்து மீது சரிந்து விழுந்த பாறைகள்

பதுளைக்கு சென்ற தொடருந்து மீது சரிந்து விழுந்த பாறைகள்

0

மலையகத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தொடருந்து மார்க்க போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.

இதல்கஸ்ஹின்ன மற்றும் ஓஹிய ஆகிய தொடருந்து நிலையங்களுக்கு இடையிலான சுரங்கப்பாதை
அருகில் நேற்று  இரவு  ஏற்பட்ட கனமழையால், மண்
மற்றும் பெரிய கற்பாறைகள் சரிந்ததால் கொழும்பிலிருந்து பதுளை செல்லும் அனைத்து தொடருந்து சேவைகளும் நானுஓயா தொடருந்து நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

கனமழையால் ஏற்பட்ட மண்சரிவினால் பல பெரிய பாறைகள் தொடருந்து என்ஜின் மீது
விழுந்ததால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தொடருந்து பயணிகள்

விபத்துக்குள்ளான தொடருந்தின் பயணிகள்
பெட்டிகள் பாதுகாப்பாக ஹப்புத்தளைக்கு மாற்றப்பட்டுள்ளன.

சம்பவ இடத்தில் இருந்து பாறைகளை அகற்றவும், தடம் புரண்ட தொடருந்து பெட்டிகளை
மீண்டும் தண்டவாளத்தில் நிறுத்தவும், நானுஓயா தொடருந்து நிலைய மீட்பு பிரிவு
அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்கள் உடனடியாக அனுப்பப்பட்டுள்ளனர்.

விபத்து காரணமாக, கொழும்பு கோட்டையில் இருந்து இயங்கும் அனைத்து பயணிகள்
தொடருந்துகளும் தற்காலிகமாக நானுஓயா தொடருந்து நிலையத்திற்கே மட்டுப்படுத்தப்பட்டுள்ளன
என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாதை இயல்பு நிலைக்கு திரும்பும் வரை இந்த
கட்டுப்பாடு அமுலில் இருக்கும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version