Home இலங்கை அரசியல் நாடாளுமன்ற வளாகத்தில் தீவிர பாதுகாப்பு

நாடாளுமன்ற வளாகத்தில் தீவிர பாதுகாப்பு

0

நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று 5வது நாளாக தொடர்கிறது.

நாடாளுமன்றம் காலை 9:30 மணிக்கு கூடும் நிலையில் வரவு செலவு திட்ட விவாதம் காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை நடைபெறும்.

நேற்றைய வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது, ​​நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவிற்கும் பிரதி அமைச்சர் மஹிந்த ஜெயசிங்கவிற்கும் இடையில் அரச ஊழியர் சம்பள அதிகரிப்பு தொடர்பாக விவாதம் நடைபெற்றது.

தீவிர பாதுகாப்பு

இதற்கிடையில், நாடாளுமன்ற வளாகம் மற்றும் மாதிவெல உறுப்பினர்களின் வீட்டுத் தொகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார நேற்றைய வரவு செலவு திட்டவிவாதத்தின் போது தெரிவித்தார்.

NO COMMENTS

Exit mobile version