திருகோணமலையில் சமூக ஊடகமான டிக்டோக் மூலம் அடையாளம் காணப்பட்ட 24 வயது திருமணமான பெண்ணை கூட்டு பாலியல் ரீதியான துன்புறுத்தலில் ஈடுபட்ட நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லங்காபட்டுன பிரதேசத்திற்கு நேற்று முன்தினம் அழைத்து வந்து குறித்த பெண்ணை தகாத நடவடிக்கை உட்படுத்திய இளைஞர்களை இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கணவரை பிரிந்து வாழும் குறித்த பெண் தனது தந்தை மற்றும் மகனுடனும் வசித்து வருகின்றார்.
பெண்ணுக்கு நேர்ந்த துயரம்
இந்நிலையில் இச்சலம்பட்டு பகுதியைச் சேர்ந்த இளைஞன் டிக் டோக் மூலம் அடையாளம் காணப்பட்ட குறித்த பெண்ணுடன் நட்பாகி, வட்ஸ்அப் மூலம் லங்காபட்டுன பகுதிக்கு வருமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனை தொடர்ந்து, முக்கிய சந்தேக நபர் அவரை மோட்டார் சைக்கிளில் நண்பரின் வீட்டிற்கு அழைத்துச் சென்று கூட்டு துன்புறுத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 16, 17 மற்றும் 18 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.
அந்தப் பெண் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டை தொடர்ந்து, கந்தளாய் பிரதேச மூத்த பொலிஸ் கண்காணிப்பாளர் எல்.எம். சஞ்சீவ பண்டார தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
