Home தொழில்நுட்பம் பிரபல டிக்டொக் கணக்குகள் மீது சைபர் தாக்குதல்

பிரபல டிக்டொக் கணக்குகள் மீது சைபர் தாக்குதல்

0

Courtesy: Sanukshan

சைபர் தாக்குதலுக்கு உள்ளான TikTok கணக்குகளை மீட்டெடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக TikTok நிறுவனத்தின் தலைமையகமான Bytedance நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, பல நிறுவனங்கள் சேர்ந்த TikTok கணக்குகள் மற்றும் பல பிரபலமான நபர்களின் TikTok கணக்குகள் இவ்வாறு சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.

அவற்றில் சர்வதேச ஊடக நிறுவனமான சிஎன்என் (cnn) மற்றும் பாரிஸ் ஹில்டன் போன்ற பிரபலமான (Paris Hilton) கணக்குகளும் சைபர் தாக்குதலுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

TikTok செயலிக்கு தடை

அண்மையில் தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக TikTok செயலிக்கு தடையை கொண்டுவர இருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்திருந்தது.

பிரதமர் பதவியில் இருந்து மோடி விலகல்

இந்நிலையில் டிக்டோக் நிறுவனம் அமெரிக்க பயனர் தரவை சீன அரசாங்கத்துடன் பகிர்ந்து கொள்ள மாட்டோம் என்றும் அதன் பயனர்களின் தனியுரிமையைப் பாதுகாக்க கணிசமான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் வாதிட்டுள்ளது.

ரஷ்யாவின் பதிலடிக்கு அச்சப்படுகின்றதா நேட்டோ?

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 

NO COMMENTS

Exit mobile version