Home இலங்கை அரசியல் சமூக மாற்றத்திற்கே ஆட்சியை கைப்பற்றினோம் : லண்டனில் டில்வின்….

சமூக மாற்றத்திற்கே ஆட்சியை கைப்பற்றினோம் : லண்டனில் டில்வின்….

0

நாங்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது ஐந்து வருடமோ பத்து வருடமோ அரசாங்கத்தை கொண்டு செல்வதற்கல்ல. நாட்டில் ஆழமான பாரிய சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதற்காகவே என்று லண்டனில் ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

லண்டனுக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த டில்வின் சில்வா அங்கு வசிக்கும் இலங்கையர் மத்தியில் உரையாற்றும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

லண்டன் விஜயம்

தொடர்ந்துரையாற்றிய அவர்,
இந்த அரசாங்கம் நெருக்கடிக்குள்ளாகி வீழ்ச்சியுறும் என யாரும் நினைத்தால் இலங்கையில் அவ்வாறு நடக்காது. அது தெட்டத் தெளிவானது.

எமக்கு கிடைத்திருக்கும் இந்த அதிகாரத்தை பயன்படுத்தி சமூகத்தில் பாரிய பிறழ்வை ஏற்படுத்துவது எமது நோக்கமல்ல.

சமூகத்தில் பாரிய மாற்றம்

ஐந்து வருடங்கள் அரசாங்கத்தை எடுத்துச் செல்வதும்.அரசாங்கத்தை பாரமெடுத்து முழுமையாக சமூகத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவது இலேசான காரியமில்லை.

நாங்கள் ஆட்சியை எடுக்கும் போது பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு வங்குரோத்தான நாட்டையே முன்னெடுத்து சென்கிறோம்.

எல்லோரும் சொல்லும் கருத்து ஒன்று தான் ரணில் நாட்டை மீட்டெடுத்தார் என்று.ஆனால் அப்படியொன்றும் நடக்கவில்லை.

ரணில், நெருக்கடிகளை மக்கள் மீது சுமத்தினார்.

IMF உடன்படிக்கை

அவர் வந்த உடன் பெற்ற கடன்களை செலுத்தப் போவதில்லை என்ற தீர்மானத்தை எடுத்தார்.அதன் பின்னர் கடன் வழங்கிய நாடுகளுடன் பிரச்சினைகள் ஏற்பட்டது.

அதன் பின்னர் IMF உடன் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையில் பிரச்சினைகளை தீர்த்துக் கொண்டனர்.அது பொருளாதாரத்தை மீட்டெடுத்தமையல்ல.

எங்களுக்கு முதலில் ஏற்பட்ட தேவை பொருளாதாரத்தை ஸ்தீரத்தன்மைக்கு கொண்டு வருவதாகும்.அதை நாங்கள் செய்துள்ளோம்.சர்வதேச நாடுகளும் அதை ஏற்றுக் கொண்டுள்ளன என்றார்.

NO COMMENTS

Exit mobile version