Home இலங்கை சமூகம் திருமலை – மட்டக்களப்பு பிரதான வீதி முழுமையாக மூடல்

திருமலை – மட்டக்களப்பு பிரதான வீதி முழுமையாக மூடல்

0

திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் இறால்குழி பிரதேசத்தில் வெள்ளம்
அதிகரித்ததால் இன்று காலை முதல் வீதி முழுமையாக மூடப்பட்டுள்ளது.

பிரதான வீதியின் உப்பாறு பாலத்துக்கு முன்னும், இறால்குழி பிரதேசத்திலும்
வீதித்தடை ஏற்படுத்தப்பட்டு பொலிஸார் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால், மூதூர் பிரதேசம் வழியாக திருகோணமலை மற்றும் கிண்ணியாவினூடாக
மட்டக்களப்புக்குச் செல்லும் போக்குவரத்து தற்காலிகமாகத் தடை
செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் இந்த விடத்தில் அதிகளவில் தரித்து நிற்பதைக் கவனத்தில் கொண்டு,
அவசர தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version