Home இலங்கை அரசியல் அம்பாறைக்கு ஒதுக்கப்படவுள்ள தேசியப் பட்டியல் : பிள்ளையான் அறிவிப்பு

அம்பாறைக்கு ஒதுக்கப்படவுள்ள தேசியப் பட்டியல் : பிள்ளையான் அறிவிப்பு

0

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் (TMVP) கடமை என்ற அடிப்படையில் தேசியப் பட்டியலை அம்பாறைக்கு ஒதுக்குவதாக கட்சியின்  தலைவர் சிவதேசதுரை சந்திரகாந்தன் (Sivanesathurai Chandrakanthan) தெரிவித்துள்ளார்.

நடைபெறவுள்ள பொதுத்தேர்தலின் திகாமடுல்ல மாவட்டத்திற்கான வேட்புமனு தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் செயலாளர் பிரசாந்தன் ஆகியோரினால் நேற்று மாலை (10.10.2024) தாக்கல் செய்யப்பட்டது.

தேசியப் பட்டியல்

இதன்போது தேசியப் பட்டியல் குறித்து ஊடகவியலாளரால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், அம்பாறை
மாவட்டத்தில் ஓர் ஆசனம் எதிர்பார்ப்பதாகவும் அவ்வாறு தவறும் பட்சத்தில் குறித்த தேசியப் பட்டியலை அம்பாறை மாவட்டத்திற்கு ஒதுக்குவதாகவும் கட்சியின் தலைவர் குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தே.சர்வானந்தம், ப.சுகிதரன், மு.விக்கினேஸ்வரன், க.குலமணி, தெ.நவநீதராஜ், வெ.மோகன், சோ.விபுலானந்ததாஸ், கோ.லோகிதரூபன், சே.ரசிகரன், அ.விஸ்கரன் ஆகியோரும் வேட்புமனுவை தாக்கல் செய்திருந்தனர்.

பொது தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்றையதினம் (11ஆம் திகதி) நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/tmvp-ampara-general-election-2024-1728612559

NO COMMENTS

Exit mobile version