Home இலங்கை அரசியல் உலக தொழிற் சந்தைக்கேற்ப கல்வி முறை மாற்றப்படும் : நாமல் அறிவிப்பு

உலக தொழிற் சந்தைக்கேற்ப கல்வி முறை மாற்றப்படும் : நாமல் அறிவிப்பு

0

உலக தொழிற் சந்தைக்கேற்ற வகையில் எமது நாட்டின் கல்வி முறை மாற்றியமைக்கப்படுமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்‌ச தெரிவித்துள்ளார்.

பண்டாரவளை  நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இதனை குறிப்பிட்டார். 

 சுபீட்சமான உலகு

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த நாட்டின் எதிர்கால சந்ததியினருக்கு சுபீட்சமான உலகை வழங்குவதற்காக, இந்த நாட்டைக் கட்டியெழுப்பி மக்களைப் பாதுகாத்து எமது அரசியல் கொள்கைகளை நடைமுறைப் படுத்துகின்றோம்.

நாட்டின் வர்த்தகர்கள் பாதுகாக்கப்பட வேண்டுமென நினைக்கின்றோம். இந் நாட்டின் பொருளாதாரம் கிராமத்தில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளாலேயே இடம்பெறுகிறது.

அவர்களிடமிருந்து வரிகளை வசூலிப்பதன் மூலம் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது. ஏற்றக்கொள்ளக்ககூடிய வகையில் வரி விதிக்கப்பட வேண்டும்.

கல்வி முறையில் மாற்றம் வர வேண்டும். உலக வேலைவாய்ப்பு சந்தைக்கு ஏற்றவாறு நம் நாட்டின் கல்வி முறை மாற்றப்பட்டு வருகிறது.

நாடு நிலையான பொருளாதார வளர்ச்சியை அடையாமல் சர்வதேச அமைப்பாக வரிகளை விதித்து இந்த நாட்டின் முன்னேற்றத்தை எதிர்பார்க்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 23 Evening

Source: https://tamilwin.com/article/sri-lanka-presidential-election-2024-1725892106

NO COMMENTS

Exit mobile version