சஜித்தின் மேடையில் நின்றவாறு தமிழ்ப் பொது வேட்பாளரை தோற்கடிக்கப் போவதாக சூளுரைத்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் நிலைப்பாட்டுக்கு எதிராக சிறீதரன் எம்.பி உள்ளிட்ட தரப்பு ஒரு நகர்வை மேற்கொண்டுள்ளனர்.
தமிழ் அரசுக் கட்சி வடக்கு கிழக்கில் ஒரு பெரிய கட்சியாக இருந்தாலும், தற்போது அதன் உறுதிநிலை இல்லாது போயுள்ளதான கூறப்படுகிறது.
அந்தக் கட்சி சொல்வதைத் தான் தமிழ் மக்கள் கேட்பார்கள் என்பதுதான் தமிழ் அரசுக் கட்சியின் ஒரு சிலரின் புரிதலாக காணப்படுவதாக குற்றம் சுமத்தப்படுகிறது.
யுத்தத்துக்குப் பின்னரான கடந்த பதினைந்து வருடங்களில் சுமந்திரனால் மேற்கொள்ளப்பட்ட ஒரு விடயம் கூட வெற்றிபெறவில்லை என விமர்சனங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
2015இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, புதிய அரசியல் யாப்புக் கதையொன்று சொல்லப்பட்டது.
தீர்வைத் தொடும் தூரத்தை நெருங்கிவிட்டோம் என்றவாறே பேசப்பட்டது. ஆனால், என்ன நடந்தது? சுமந்திரனின் அனைத்து நகர்வுகளும் தோல்வியடைந்தன என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், லங்காசிறி ஊடகத்தின் சிறப்பு நேர்காணலில் கலந்துக்கொண்ட உலகத்தமிழ்மறை (திருக்குறள்)அமைப்பின் தலைவர் பூநகரி பொன்னம்பலம் முருகவேள் ,தமிழரசுக் கட்சியை நீதிமன்றத்தின் முன் கொண்டு நிறுத்தியவரே இன்று தமிழரசு கட்சி தொடர்பில் மக்களிடையே ஒரு குழப்பகரமான சூழலை ஏற்படுத்தியுள்ளார் என குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும், தன்னுடைய தனிப்பட்ட அரசியல் எதிரடகாலத்திற்காக சுமந்திரன் திட்டமிட்டு அனைத்தையும் நடத்திக்கொண்டிருக்கின்றார் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,