Home இலங்கை அரசியல் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிராக தடை : வழக்கை ஒத்திவைத்த நீதிமன்றம்

தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிராக தடை : வழக்கை ஒத்திவைத்த நீதிமன்றம்

0

இலங்கைத் தமிழரசு கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிராக யாழ்.நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் ஜூன் 20ஆம் திகதிக்கு
ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

யாழ். (Jaffna) நீதிமன்றத்தில், இலங்கை தமிழரசு கட்சியின் மாநாட்டுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு தொடர்பான வழக்கு இன்று (25.04.2024) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, ஐந்தாவது எதிராளியான சண்முகம் குகதாசன் (Shanmugam Gugadasan) இன்றும் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை. 

கால அவகாசம் 

இதற்கமைய, திருகோணமலையில் உள்ள அவரது சொந்த முகவரிக்கு மீண்டும் அழைப்பு கட்டளை
அனுப்புவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், முதலாம் மற்றும் மூன்றாம் எதிராளிகள் தரப்பு சார்பில் முன்னிலையான சிரேஷ்ட
சட்டத்தரணி ந. ஶ்ரீகாந்தா தங்கள் தரப்பு கருத்துக்களை முன்வைக்க கால அவகாசம்
கோரியுள்ளார்.

இதனையடுத்து, எதிராளிகள் தமது சமர்ப்பணங்களை முன்வைக்க அவகாசம் வழங்கி ஜீன்
20ஆம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இலங்கை தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு தொடர்பாக திருகோணமலை
மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் மே 31ஆம்
திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Source: https://tamilwin.com/article/tna-party-case-has-postponed-1714040028

NO COMMENTS

Exit mobile version