Home இலங்கை அரசியல் அவசர பேச்சுவார்த்தைக்காக கூடுகிறது இலங்கை தமிழரசுக் கட்சி

அவசர பேச்சுவார்த்தைக்காக கூடுகிறது இலங்கை தமிழரசுக் கட்சி

0

ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு நிலைப்பாட்டை இலங்கை தமிழரசுக் கட்சி வெளியிட்ட பின்னரான மத்திய செயற்குழு கூட்டம் இந்த வாரம் நடைபெறவுள்ளது.

குறித்த கூட்டமானது எதிர்வரும் 14.09.2024 திகதி வவுனியாவில் நடைபெறவுள்ளது.

இந்த கூட்டமானது இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.

ஜனாதிபதி தேர்தல் 

இந்த கூட்டத்தில் ஜனாதிபதி தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ சுமந்திரன் வெளியிட்ட கருத்து தொடர்பில் இறுதி நிலைப்பாடு எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இதன்படி கூட்டத்திற்கு அனைத்து கட்சி அங்கத்தவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சி ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக  இலங்கை தமிழரசு கட்சி கடந்த முதலாம் திகதி அறிவித்திருந்தது.

இதன்படி தமிழ் பொதுவேட்பாளராக களமிறங்கியுள்ள பா. அரியநேத்திரனை போட்டியில் இருந்து விலகுமாறு கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த  அறிவித்தலை அக்கட்சியின் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்திருந்தார்.

எனினும், இது தொடர்பில் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா எந்தவிமான கருத்தையும் வெளிப்படுத்தாத நிலையில் குறித்த கூட்டத்தில் அவரது நிலைப்பாடும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version