Home இலங்கை அரசியல் சிறீதரன் உடனடியாக வீதிக்கு வரவேண்டும்! பகிரங்க எச்சரிக்கை

சிறீதரன் உடனடியாக வீதிக்கு வரவேண்டும்! பகிரங்க எச்சரிக்கை

0

இப்போது வடக்கில் இருக்கும் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடுத்த தேர்தலில் ஒருவராக மாறலாம் அல்லது ஒருவர் கூட இல்லாமலும் போகலாம் என்று யாழ். பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞான பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தந்தை செல்வாவின் 47ஆவது நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு நேற்று (26.04.2024) ஆற்றியுள்ள நினைவுப் பேருரையிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

சிறீதரனும் உரிய தலைமைகளும் தமிழரசு கட்சியை காப்பாற்ற வீதிக்கு வருதல் வேண்டும், மக்களை அணிதிரட்டல் வேண்டும், மக்களுடன் ஒன்று சேர்ந்து நீதிமன்றத்தின் குற்றச்சாட்டுக்களை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதை எண்ணம் கொள்ள வேண்டும்.

அப்படி செய்வீர்கள் என்றால் இந்த ஈழ தமிழர்கள் தங்களுடைய இருப்பில் ஏதேனும் மாற்றம் நிகழும் என்று நம்பிக்கையுடன் புலம்பெயர்வை நிறுத்திவிட்டு ஆரோக்கியமான நம்பிக்கையுடன் பயணிப்பதற்கு ஒரு சூழல் கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.

Source: https://tamilwin.com/article/tna-tamil-party-problem-court-order-1714187973

NO COMMENTS

Exit mobile version