Home இலங்கை அரசியல் நாடாளுமன்ற தேர்தல் : வேட்புமனுவில் கையொப்பமிட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வேட்பாளர்கள்

நாடாளுமன்ற தேர்தல் : வேட்புமனுவில் கையொப்பமிட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வேட்பாளர்கள்

0

இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (TNPF) சார்பாக யாழ் – கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுவில் கையொப்பமிட்டனர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கொக்குவில் பகுதியில் உள்ள தலைமை அலுவலகத்தில் இன்று (05) இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) தலைமையில் வேட்பாளர்கள் வேட்புமனுவில் கையெழுத்திட்டனர்.

சைக்கிள் சின்னத்தில் போட்டி 

நாடாளுமன்ற தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் சைக்கிள் சின்னத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இலங்கையின் இவ்வருட பொதுத் தேர்தலுக்கு நேற்று (04) வரை 122 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் இதுவரை 22 தொகுதிகளில் 21 தொகுதிகளுக்கு சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version