நிதியை வைத்து தமிழர்களை அடிபணிய செய்ய அநுர தலைமையிலான
தேசிய மக்கள் சக்தி (NPP) முனைவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி (Tamil National People’s Front ) குற்றஞ்சாட்டியுள்ளது.
யாழ். (Jaffna) ஊடக அமையத்தில் இன்று (20) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
அங்கு அவர்கள் மேலும் தெரிவித்ததாவது, தனது கட்சியிடம் அதிகாரம் கிடைக்கும் பட்சத்திலே உள்ளூர் அதிகர சபைகளுக்கு
நிதி ஒதுக்கப்படும் என்ற தொனிப்பொருளில் வடக்கின் தேர்தல் பிரசார மேடைகளில் ஜனாதிபதி
கருத்து வெளியிட்டு வருகின்றார்.
இது ஒரு மிகப்பெரிய ஊழல் மோசடியாகும்.
தேர்தல் ஆணைக் குழுவுக்கு இரண்டாவது கடிதமும் அனுபப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் கருத்து ஒரு மக்கள் கூட்டத்தின் ஜனநயகத்தை கேள்விக்
குறியாக்குகின்றது.
அதுமட்டுமல்லாது இவர்கள் எத்தகைய பொய்யர்கள் என்பதை காட்டுகின்றது.
இதை மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.
இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவித்தவற்றை கீழுள்ள காணொளியில் காண்க…
https://www.youtube.com/embed/Eq8w2sMUAKI
