Home இலங்கை அரசியல் தியாக தீபம் திலீபனை வணங்கி பிரசார பணிகளை ஆரம்பித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர்

தியாக தீபம் திலீபனை வணங்கி பிரசார பணிகளை ஆரம்பித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர்

0

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் (TNPF) தியாக தீபம் திலீபனது நினைவாலயத்திலிருந்து பிரசார பணிகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த பிரசார பணிகள் நல்லூர் (Nallur) பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனது நினைவாலயத்திலிருந்து இன்றையதினம் (18) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தியாக தீப திலீபனின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, சுடரேற்றி வணக்கம்
செலுத்திய பின்னர் பிரசார நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

பிரசார நடவடிக்கைகள்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், தமிழ்
தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஸ் உட்பட கட்சியின்
உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இந்த பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
தமிழ்தேசிய முன்னணியை தவிர மற்றைய அனைவரும் ஒற்றையாட்சி அரசியலுக்கு ஆதரவாகவே உள்ளனர்.

தமிழ் மக்கள் தமிழ்தேசிய முன்னணிக்கு வழங்கும் அறுதிப்பெரும்பான்மைக்கு அமையவே இந்த அநியாயத்தை தடுக்க முடியும்.

தமிழ்தேசிய முன்னணி

தமிழ் மக்கள் தமிழ்தேசிய முன்னணிக்கு பெரும்பான்மை வரவில்லையாயின் தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று நாடாளுமன்றம் சென்ற தமிழ் உறுப்பினர்களுடைய பெரும்பான்மை ஒற்றையாட்சியை ஏற்றுக்கொண்ட வரலாறு பதியப்படும்” என குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர்
செல்வராசா கஜேந்திரன்
சுப்பிரமணியம் தவபாலன் வேட்பாளர்களான திலகநாதன் கிந்துஜன், தேவதாஸ்
தினேஷ்குமார் மற்றும் றகுமதி சந்திரகுமார் உள்ளிட்டவர்கள் நடைபெற உள்ள நாடாளுமன்ற
தேர்தலில் வன்னி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவுள்ளனர்.

தமிழ்தேசிய மக்கள் முன்னணி தமிழர் தாயத்தில் உள்ள 5 தேர்தல் மாவட்டங்களில்
போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version